நீட் தேர்வு முறைகேடு புகார் உயர் நீதிமன்றம் கேள்வி
நீட் தேர்வு முறைகேடு புகார் உயர் நீதிமன்றம் கேள்வி
UPDATED : பிப் 10, 2021 12:00 AM
ADDED : பிப் 10, 2021 09:30 AM
சென்னை:
மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான, நீட் தேர்வு விடைத்தாள் முறைகேடு புகார் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை, ஏன் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
கோவையைச் சேர்ந்த, மனோஜ் என்ற மாணவர் தாக்கல் செய்த மனு:
&'நீட்&' தேர்வு முடிந்த பின், 2020 அக்., 5ம் தேதி, ஓ.எம்.ஆர்., விடைத்தாள், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அக்., 8 - 16 வரை, 594 மதிப்பெண் பெற்றிருந்ததாக, எனக்கு காட்டியது. அக்., 17ல், 248 ஆக குறைத்து, ஓ.எம்.ஆர்., வெளியிடப்பட்டது. இந்த முறைகேடு குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், சைபர் கிரைம் பிரிவு அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழு, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி புகழேந்தி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ரவி, &'&'தேர்வு முகமையின் குளறுபடியால், மாணவர் பாதிக்கப்பட்டுள்ளார். &'&'நீட் தேர்வின் நம்பகத்தன்மைக்கு, இது உதாரணம். மாணவர்களின்மருத்துவக் கனவு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,&'&' என்றார்.
இதையடுத்து, &'சைபர் குற்றங்களை கண்டறிவதில், நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவை ஏற்படுத்தலாமா&' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன் ஆஜராகி, &'&'யூகத்தின் அடிப்படையில், மனுதாரரின் குற்றச்சாட்டு உள்ளது. தேசிய தகவல் மையம், இந்த விஷயத்தை விசாரிக்கலாம்,&'&' என்றார்.
தேசிய தேர்வு முகமை சார்பில், மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, &'&'இந்த வழக்கில், எந்த முகாந்திரமும் இல்லை. அடிப்படை முகாந்திரம் இருந்தால் மட்டுமே, சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட முடியும். &'&'ரசாயன முறையில் தயாரிக்கப்பட்டுள்ள, ஓ.எம்.ஆர்., தாளில் திருத்தம் செய்யவோ, எழுதியதை அழிக்கவோ முடியாது,&'&' என்றார்.
இதையடுத்து, விசாரணையை, வரும், 18ம் தேதிக்கு, நீதிபதி புகழேந்தி தள்ளி வைத்தார்.
