தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விவசாயத்தில் சாதிக்க வழி இருக்கு: பொறியியல் பட்டதாரி சொல்வதை கேளுங்க...

விவசாயத்தில் சாதிக்க வழி இருக்கு: பொறியியல் பட்டதாரி சொல்வதை கேளுங்க...

விவசாயத்தில் சாதிக்க வழி இருக்கு: பொறியியல் பட்டதாரி சொல்வதை கேளுங்க...


UPDATED : பிப் 14, 2021 12:00 AM

ADDED : பிப் 14, 2021 03:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 14, 2021 12:00 AM ADDED : பிப் 14, 2021 03:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்லடம் அடுத்த கே.என்.புரத்தை சேர்ந்த, பொறியியல் பட்டதாரி மாணவர் மைக்கேல் சாமிமுத்து, 24, வருமானத்தை பெருக்கும் நோக்கில், விளைபொருள் நேரடி விற்பனை மையத்தை துவக்கி உள்ளார்.
மைக்கேல் சாமிமுத்து கூறியதாவது:

&'என் அப்பா, 20 ஆண்டாக குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்து வருகிறார். நான் கோவை தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தேன். விவசாயம் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக இரண்டு ஆண்டாக அப்பாவுடன் சேர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். தக்காளி, வெங்காயம், புடலை, பாகல், வெண்டை உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகளையும் உற்பத்தி செய்து விற்பனைக்கு திருப்பூர் வியாபாரிகளிடம் கொடுத்து வருகிறேன்.
இதுதவிர, கே.என்.புரம் பகுதியில் தோட்டத்தின் அருகிலேயே நேரடி விற்பனை மையம் ஒன்றையும் அமைத்துள்ளேன். இங்கு, உற்பத்தி செய்யும் காய்கறிகளை நேரடியாக விற்று வருகிறேன். இதன் மூலம், ஒவ்வொரு காய்கறிக்கும் மூட்டை ஒன்றுக்கு 200 -- 300 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது. மேலும், மார்க்கெட் செல்வதால் ஏற்படும் வண்டி வாடகை, ஆள் கூலி உள்ளிட்ட கூடுதல் செலவுகள் குறைவதுடன், நேரடியாக விற்பனை செய்வதால் பொதுமக்களுக்கும் குறைந்த விலையில் காய்கறிகளை தர முடிகிறது.
வேலைக்கு சென்று சம்பாதிப்பதை விட, விவசாய தொழில் மூலம் கூடுதல் வருமானம் பெறலாம் என்பது எனது கருத்து. விளைச்சலுக்கு ஏற்ற விலை கிடைக்கவில்லை என கவலைப்படும் விவசாயிகள், இது போன்று நேரடி விற்பனை ஆரம்பிக்கலாம், என்று சொன்ன அவரை வாழ்த்தி விடைபெற்றோம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us