தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி., சேர்க்கை ராமதாஸ் கோரிக்கை

ஐ.ஐ.டி., சேர்க்கை ராமதாஸ் கோரிக்கை

ஐ.ஐ.டி., சேர்க்கை ராமதாஸ் கோரிக்கை


UPDATED : பிப் 15, 2021 12:00 AM

ADDED : பிப் 15, 2021 08:44 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 15, 2021 12:00 AM ADDED : பிப் 15, 2021 08:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை ஐ.ஐ.டி., உள்ளிட்ட, இந்தியாவின் புகழ் பெற்ற, ஐந்து ஐ.ஐ.டி.,களில், முனைவர் பட்ட ஆய்வுக்கான மாணவர் சேர்க்கையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் உள்ளிட்ட, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மிகப்பெரிய சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு பிரிவினரை புறக்கணித்துவிட்டு, பொதுப் பிரிவினரைக் கொண்டு, ௭௨.௧௦ சதவீத இடங்கள் நிரப்பப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.நாடு முழுதும் உள்ள, ௨௩ ஐ.ஐ.டி.,களில், இட ஒதுக்கீடு நடைமுறை வந்த காலம் முதல், இப்போது வரை, ஒட்டு மொத்தமாக வழங்க வேண்டிய, ௪௯.௫௦ சதவீத இட ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, வெறும், ௧௨ சதவீதம் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுத் தேர்வாணையத்தை அமைக்க வேண்டும். பேராசிரியர்கள் நியமனம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கை குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட ஐ.ஐ.டி., நிர்வாகங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us