தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு திட்டத்தில் அடிப்படை கல்வி

மத்திய அரசு திட்டத்தில் அடிப்படை கல்வி

மத்திய அரசு திட்டத்தில் அடிப்படை கல்வி


UPDATED : பிப் 17, 2021 12:00 AM

ADDED : பிப் 17, 2021 09:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2021 12:00 AM ADDED : பிப் 17, 2021 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
மத்திய அரசின், கற்போம் எழுதுவோம் திட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில், அடிப்படை கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 
ஊட்டி மற்றும் கூடலுார் கல்வி மாவட்டத்தில், இதற்காக அமைக்கப்பட்ட, 163 மையங்களில், 18 வயதுக்கு மேற்பட்ட, அடிப்படை கல்வி அறிவு இல்லாத, 5,000 பேருக்கு கல்வி வழங்கும் பணி துவங்கியது.
முதன்மை கல்வி அலுவலர் நசருதீன் கூறுகையில், &'&'நீலகிரி மாவட்டத்தில், 163 அரசு பள்ளிகளில், தன்னார்வலர்கள் வாயிலாக கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. மாலை, 4:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை பாடங்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாதம் பாடம் கற்பித்து தேர்வு நடத்தப்படும். இத்திட்டத்தில் பலர் சேர்ந்து அடிப்படை கல்வி அறிவை பெற்று வருகின்றனர்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us