தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவிட் 19 செயலியுடன் தலைமையாசிரியர்கள் மல்லுக்கட்டு!

கோவிட் 19 செயலியுடன் தலைமையாசிரியர்கள் மல்லுக்கட்டு!

கோவிட் 19 செயலியுடன் தலைமையாசிரியர்கள் மல்லுக்கட்டு!


UPDATED : பிப் 17, 2021 12:00 AM

ADDED : பிப் 17, 2021 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2021 12:00 AM ADDED : பிப் 17, 2021 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் அரசு பள்ளிகள் செயல்பாடுகள் குறித்து சரியாக செயல்படாத &'கோவிட் - 19 தயாரிப்பு பணி&' செயலியில் பதிவேற்றம் செய்ய தலைமையாசிரியர்கள் படாதபாடு படுகின்றனர்.
கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு விதிமுறை பின்பற்றி 9 முதல்- பிளஸ் 2 வகுப்பு வரை செயல்படுகின்றன. பள்ளி செயல்பாட்டை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் எமிஸில் &'கோவிட் -19 தயாரிப்புப் பணி&' என்ற புதிய செயலியை கல்வித்துறை உருவாக்கியுள்ளது.
அதில் பள்ளிக்கு மாணவர் வருகை, சானிடைசர்ஸ் இருப்பு உள்ளதா, சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா, துப்புரவு பணி நடந்ததா… என 15 வினாக்களுக்கு தலைமையாசிரியர்கள் தினமும் காலை 10:00 மணிக்குள் விடையளிக்க உத்தர விடப்பட்டுள்ளது. ஆனால் சம்மந்தப்பட்ட செயலி மதியம் 2:00 மணிக்கு தான் செயல் படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தலைமையாசிரியர்கள் கூறுகையில் “வழக்கமான பள்ளி செயல்பாடு, பதிவேடு பராமரிப்பு மூலம் பதில் அளிக்கப்பட்ட தகவல் குறித்தே செயலியிலும் கேள்விகள் கேட்டு நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் பள்ளி செயல்பாடு பாதிக்கிறது. செயலியும் எளிதில் &'ஓபன்&' ஆவதில்லை. இதன் மூலம் தேவையில்லாத சிரமம், மனஉளைச்சல் ஏற்படுகிறது. இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்” என்றனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us