UPDATED : பிப் 20, 2021 12:00 AM
ADDED : பிப் 20, 2021 08:45 AM
பானிபட்:
ஹரியானாவில், நீதிமன்ற பியூன் பதவிக்கு, பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் உட்பட, 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், பானிபட் மாவட்ட நீதிமன்றத்தில், பியூன் எனப்படும், அலுவலக உதவியாளர் பணிக்கான, 13 இடங்கள் காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக, விண்ணப் பங்கள் வரவேற்கப்பட்டன. குறைந்தபட்ச கல்வி தகுதி, பிளஸ் 2 என நிர்ணயிக்கப் பட்டது.
மொத்தமுள்ள, 13 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு, 22 ஆயிரத்து, 671 பேர் விண்ணப்பித்தனர். இதில், இளநிலை, முதுநிலை பட்டதாரிகளில் துவங்கி, தகவல் தொழில் நுட்பம் மற்றும் சிவில் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பித்தனர். ஆண்கள், பெண்கள் உட்பட, ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்ததை அடுத்து, 12 ஆயிரம் பேருக்கு மட்டும், நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. மற்றவர்களுக்கு, வேறொரு நாளில் நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
