தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு கூடைப்பந்து மைதானம்

மாணவர்களுக்கு கூடைப்பந்து மைதானம்

மாணவர்களுக்கு கூடைப்பந்து மைதானம்


UPDATED : பிப் 25, 2021 12:00 AM

ADDED : பிப் 25, 2021 08:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2021 12:00 AM ADDED : பிப் 25, 2021 08:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்;
தேசிய கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்காக, புதிய கூடைப்பந்து மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, தேசிய விளையாட்டு வீரர் முன்வந்துள்ளார். 
கிராமப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க, தேசிய கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், ஏரி துார்வாருதல், ஏரி அமைத்தல், பள்ளிகள் சீரமைத்தல் உட்பட பல பணிகள் செய்யப்படுகிறது. சிக்கபல்லாபூர் மாவட்டம், சித்லகட்டா தாலுகா, அப்பாஜிகவுடனஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக, 100 அடி நீளம், 55 அடி அகலத்தில் சிமென்டால் ஆன கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
பஞ்சாயத்து உறுப்பினர் தியாகராஜ் கூறுகையில், &'&'இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே பள்ளியின் சுவற்றில் ரயில், பஸ், விமானம், கப்பல் வரைந்து, மாணவர்களை ஈர்த்து வந்தோம்.&'&'தற்போது, எங்கள் குழந்தைகளும் கூடைப்பந்து போட்டி விளையாட ஆசைப்பட்டோம். அதற்காகவே, நரேகா திட்டத்தின் கீழ், கூடைப்பந்து மைதானம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில கூடைப்பந்து வீரர் சித்லகட்டா முனிகிருஷ்ணா ஒப்புக்கொண்டு, வாரத்தில் இரண்டு நாட்கள் பயிற்சி அளிப்பதாக தெரிவித்தார்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us