தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒன்று முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை

ஒன்று முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை

ஒன்று முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை


UPDATED : பிப் 25, 2021 12:00 AM

ADDED : பிப் 25, 2021 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 25, 2021 12:00 AM ADDED : பிப் 25, 2021 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கணினி அறிவியல் பாடத்தை ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கட்டாயமாக்க வேண்டும் என, கணினி பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட்டில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, கணினி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம், ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தமிழக பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச்செயலர் குமரேசன் விடுத்த அறிக்கை: 

தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், 2011ம் ஆண்டே, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தனியாக புத்தகமும் தயாரிக்கப்பட்டது. ஆனால், அதை பள்ளி கல்வித்துறை செயல்படுத்தவில்லை.
நம் பாட திட்டத்தை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பின்பற்றி, அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்துள்ளன. எனவே, தமிழகத்திலும், ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும். இதனால், ஆயிரக்கணக்கான கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us