தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவியல் மன்ற இணையவழி கருத்தரங்கு

அறிவியல் மன்ற இணையவழி கருத்தரங்கு

அறிவியல் மன்ற இணையவழி கருத்தரங்கு


UPDATED : பிப் 27, 2021 12:00 AM

ADDED : பிப் 27, 2021 05:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 27, 2021 12:00 AM ADDED : பிப் 27, 2021 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அறிவியல், தொழில் நுட்ப மாமன்றம் சார்பில் நாளை 28ம் தேதி நடக்கும் இணைய வழி கருத்தரங்கில் பார்வையாளராக பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்ற உறுப்பினர் செயலர் தினேஷ் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் நாளை 28 ம் தேதி காலை 10:30 முதல் பிற்பகல் 12 மணி வரை இணைய வழி கருத்தரங்கம் நடக்கிறது. இதில் காணொலி மூலம் பொது மக்கள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மாமன்ற முன்னாள் உறுப் பினர் செயலர் வின்சென்ட், புதுச்சேரி பல்கலைக் கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் ஜோசப் செல்வின் ஆகியோர் காணொலி மூலம் சொற்பொழிவாற்றுகின்றனர்.
ஆர்வமுள்ள பார்வையாளர்கள் நாளை காலை 10:30 முதல் http://meet.google.com/nib-atow-cvm என்ற கூகுள் மீட் அல்லது https://youtu.be/MLIqUfHVtwo என்ற யூடியூப் இணைய இணைப்பிலும் இணைந்து பங்கேற்கலாம்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us