பாரம்பரிய நெல் அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்
பாரம்பரிய நெல் அறுவடை செய்த வேளாண் கல்லுாரி மாணவியர்
UPDATED : மார் 02, 2021 12:00 AM
ADDED : மார் 02, 2021 09:10 AM
தஞ்சாவூர்:
அரசு பள்ளி ஆசிரியர் வயலில் சாகுபடி செய்திருந்த பாரம்பரிய நெல்லை, வேளாண் கல்லுாரி மாணவியர் அறுவடை செய்து கொடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன், 33; அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். நான்கு ஆண்டுகளாக இவர், தன், 1 ஏக்கர் நிலத்தில், பாரம்பரிய நெல் ரகமான மாப்பிளை சம்பா, கருப்பு கவுனி, கொத்தமல்லி சம்பா, சீரக சம்பா ஆகிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார்.
செங்கிப்பட்டி அருகே உள்ள தனியார் வேளாண் கல்லுாரி மாணவியர், இயற்கை விவசாயம் குறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்து, ஆசிரியர் பாலமுருகனை சந்தித்தனர். பாலமுருகன், பாரம்பரிய நெல் சாகுபடி, இயற்கையான முறையில் உரம் தயாரிப்பு குறித்து மாணவியருக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பாரம்பரிய நெல்லின் சிறப்பை கேட்ட மாணவியர், அறுவடையின் போது அழைக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் நேற்று, பாலமுருகன் வயலில் அறுவடை நடந்தது. இதையடுத்து வயலுக்கு வந்த, 13 மாணவியர், நெல் அறுவடை செய்து, ஆசிரியருக்கு உதவினர்.
