தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நான்கு சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நான்கு சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நான்கு சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : மார் 07, 2021 12:00 AM

ADDED : மார் 07, 2021 09:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 07, 2021 12:00 AM ADDED : மார் 07, 2021 09:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில் உள்ள நான்கு சான்றிதழ் படிப்பில் சேர்ந்து படிக்க வரும் 15 ம்தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜிப்மர் கல்வி பிரிவு புலமுதன்மையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

ஜிப்மர் மருத்துவ கல்லுாரியில், அவசர மருத்துவ தொழில் நுட்ப வல்லுநர், சவக் கிடங்கு உதவியாளர், குடல் வாய் பாதுகாப்பு முறை, ரத்த சேகரிப்பு முறை உள்ளிட்ட சான்றிதழ்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 38 இடங்கள் உள்ளன. குடல் வாய் பாதுகாப்பு முறை சான்றிதழ் படிப்பில் பி.எஸ்.டி.,நர்சிங் முடித்த மாணவர்கள், ஓராண்டு அனுபவ சான்றிதழை சமர்பித்து சேரலாம். மற்ற சான்றிதழ் படிப்புகளுக்கு உயிரியல் பாடத்துடன் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மட்டுமே சேர முடியும். 
பயிலும் ஓராண்டு காலத்திற்கு ரூ. 300 உதவித் தொகை வழங்கப்படும். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விருப்பத்தின் பேரில் மேலும் ஓராண்டு காலம் ஜிப்மர் அவசர சிகிச்சை மையத்தில் மாதம் ரூ. 3713 உதவித் தொகையுடன் பயிற்சி தொடரலாம். 
சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜிப்மர் கல்வி பிரிவு அலுவலகம் அல்லது www.jipmer.edu.in என்ற இணைய தளத்தில் பெறலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 15 ம் தேதி மாலை 4.30 மணியோடு சமர்பிக்க வேண்டும். இவர்களுக்கு வரும் 19 ம் தேதி காலை 9.30 முதல் 10.30 மணி வரை ஜிப்மர் அகடமி சென்டர் 3-வது தளத்தில் உள்ள தேர்வு கூட அறையில் நேர்காணல் நடக்கும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us