தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரா.கிருஷ்ணமூர்த்திக்கு பாரத ரத்னா விருது: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இரா.கிருஷ்ணமூர்த்திக்கு பாரத ரத்னா விருது: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

இரா.கிருஷ்ணமூர்த்திக்கு பாரத ரத்னா விருது: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை


UPDATED : மார் 08, 2021 12:00 AM

ADDED : மார் 08, 2021 11:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 08, 2021 12:00 AM ADDED : மார் 08, 2021 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தினமலர் நாளிதழின் கவுரவ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு, &'பாரத ரத்னா&' விருது வழங்க வேண்டும்&' என, தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
&'தினமலர்&' நாளிதழின் கவுரவ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவை முன்னிட்டு, கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில், தமிழ்நாடு அனைத்து பத்திரிகை மற்றும் ஊடக ஆசிரியர்கள் சங்கம் சார்பில், மலரஞ்சலி செலுத்தப் பட்டது.
வெற்றிடம்

சங்கத்தின் மாநிலத் தலைவர் தடயம் பாபு தலைமையில், இரா.கிருஷ்ணமூர்த்தியின் உருவப் படத்திற்கு, நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.சங்க பொருளாளர் ராஜா, மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில அமைப்பாளர் திருமாறன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சபாநாயகம், லோகநாதன், பிரகாஷ், ரமேஷ் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
சங்கத்தின் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: &'தினமலர்&' நாளிதழின் கவுரவ ஆசிரியர், மூத்த இதழியலாளர், நாணயவியல் ஆராய்ச்சியாளர், தமிழறிஞர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவு, இதழியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சித் துறையில் மிகப் பெரிய வெற்றிடத்தை உண்டாக்கி உள்ளது.
இதழியல் மற்றும் நாணயவியல் ஆராய்ச்சியில், தமிழர்களின் தொன்மையான வரலாற்று சான்றுகளை, தமிழ் கூறும் நல்லுலகிற்கு சாட்சியாக ஆவணப்படுத்தி உள்ளார். அவரது பணியைப் பாராட்டி, அவருக்கு, நாட்டின் உயரிய &'பாரத ரத்னா&' விருது வழங்கி, கவுரவப்படுத்த வேண்டும். மேலும், ஆராய்ச்சித்துறை மாணவர்கள், அறிஞர்களுக்கு, இவரது பெயரில் விருது, பொற்கிழி வழங்கி, அவரது புகழை நிலைநிறுத்த வேண்டும் என, மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
மலர் அஞ்சலி

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள, புதுச்சேரி பிராமண சேவா பவுண்டேஷன் தலைமை அலுவலகத்தில், மலர் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பவுண்டேஷன் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
இது தொடர்பாக, அச்சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், &'டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவு, பத்திரிகை உலகிற்கும், பிராமண சங்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு&' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேத்தியாதோப்பு

&'தினமலர்&' கவுரவ ஆசிரியர், டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி மறைவையொட்டி, சேத்தியாதோப்பு அடுத்த மஞ்சள்கொல்லையில், அருட்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை, மக்கள் நலன் காக்கும் மாமன்றம் சார்பில், இரங்கல் கூட்டம் நடந்தது.மாமன்ற நிர்வாகி, வழக்கறிஞர் வேல்ராமலிங்கம் தலைமை வகித்தார். 
இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு, அறக்கட்டளை தலைவர் புகழேந்தி, சீப்பான் ஏரி பாசன விவசாய சங்க தலைவர் செந்தில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் விவேகானந்தன், பேராசிரியர் பிரேமலதா, பாரதி உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர்.
இதில் மஞ்சள்கொல்லை கிராமத்தினர் பங்கேற்றனர். டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு, கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ராஜவேலு:

இரா.கிருஷ்ணமூர்த்தி, இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன். தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை முதன் முதலில், நாளிதழில் புகுத்தியவர்; கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர்.சிறந்த நாணயவியல் அறிஞராக திகழ்ந்தவர். சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்கள் பலவற்றை கண்டுபிடித்து, பல ஆய்வுகளையும் செய்தவர். அவரது மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்கும், பத்திரிகை உலகிற்கும் மிகப் பெரிய இழப்பு.
புதுச்சேரி புத்தக சங்க இயக்குனர் முருகன்:

&'தினமலர்&' கவுரவ ஆசிரியரும், சிறந்த நாணயவியல் ஆராய்ச்சியாளருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுச் செய்தி கேட்டு, மனவேதனை அடைந்தேன்.இதழியல் துறையில் தனக்கென இடம் பிடித்துள்ள, அவரது மறைவு, தமிழ் பத்திரிகை உலகிற்கு பேரிழப்பு. அவர் நாணயவியலின் தந்தையாக திகழ்ந்தார். தமிழ், செம்மொழி என்ற தகுதியைப் பெற, இவரது நாணயவியல் கண்டுபிடிப்புகளை, தமிழக அரசு, முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது.
சென்னை நாணயவியல் அமைப்பின் நிர்வாகி மணிகண்டன்:

நாணயத்தின் இரு பக்கங்கள் போல, &'தினமலர்&' நாளிதழையும், சங்க கால நாணயங்களையும் பாவித்து, தன் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி. இவ்வாறு, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us