தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களை கண்காணிக்க பெற்றோருக்கு அட்வைஸ்

மாணவர்களை கண்காணிக்க பெற்றோருக்கு அட்வைஸ்

மாணவர்களை கண்காணிக்க பெற்றோருக்கு அட்வைஸ்


UPDATED : மார் 14, 2021 12:00 AM

ADDED : மார் 14, 2021 08:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2021 12:00 AM ADDED : மார் 14, 2021 08:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
வால்பாறையில், பள்ளி செல்லும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.
வால்பாறை காந்திசிலை வளாகத்தில், நுாறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து போலீஸ் சார்பில், கையெழுத்து இயக்கம் நடந்தது. 
காந்திசிலை வளாகத்தில் பஸ்சிற்காக காத்திருந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி பேசியதாவது:

பள்ளி மற்றும் கல்லுாரியில் படிக்கும், மாணவ, மாணவிகள் கட்டாயம் முக்கவசம் அணிந்து வர வேண்டும். மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெற்றோர் கஷ்டத்தை உணர்ந்து நன்றாக படிக்க வேண்டும். மாணவிகளுக்கு ஏற்படும் எந்த பிரச்னையானாலும், தயங்காமல் போலீசில் புகார் செய்யலாம். பள்ளி செல்லும் குழந்தைகளின் நடவடிக்கையை கண்காணிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும். இவ்வாறு, தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us