தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தாகூர் கல்லுாரி முதல்வர் 56வது நாளாக போராட்டம்

தாகூர் கல்லுாரி முதல்வர் 56வது நாளாக போராட்டம்

தாகூர் கல்லுாரி முதல்வர் 56வது நாளாக போராட்டம்


UPDATED : மார் 18, 2021 12:00 AM

ADDED : மார் 18, 2021 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 18, 2021 12:00 AM ADDED : மார் 18, 2021 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
அடிப்படை வசதி செய்து கொடுக்காததை கண்டித்து, தாகூர் கல்லுாரி முதல்வரின் கவன ஈர்ப்பு போராட்டம் 56வது நாளாக நீடித்தது.
லாஸ்பேட்டையில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். வகுப்பறை இருக்கை அதிகரிப்பு, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மனநல ஆலோசகர்களை பணியமர்த்த வேண்டும், கல்லுாரி பராமரிப்பு பணி தொகையை உயர்த்த வேண்டும், ஊதிய நிலுவையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, கல்லுாரி நிர்வாகம் உயர்கல்வித் துறையிடம் வலியுறுத்தியது.
இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதையடுத்து இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கல்லுாரியில் தாகூர் சிலை அருகே அமர்ந்து, கல்லுாரி முதல்வர் சசிகாந்தாஸ் கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார். அங்கேயே தனது அலுவலக பணியையும் மேற்கொள்கிறார். 56வது நாளாக நீடிக்கும் அவரது போராட்டத்துக்கு சக பேராசிரியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கல்லுாரி பேராசிரியர் சம்பத்குமார், கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு அளித்துள்ள மனுவில், கல்லுாரி வளர்ச்சிக்காக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வேதனையளிக்கின்றது. தாங்கள் கல்லுாரிக்கு வருகை தந்து ஆய்வு செய்து, தீர்வு காண வேண்டும்&' என கூறி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us