UPDATED : மார் 19, 2021 12:00 AM
ADDED : மார் 19, 2021 01:06 PM
அ நிறம் | அளவு
சென்னை:
அனைத்து கல்லுாரி பேராசிரியர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.தமிழக சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்கும் நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர், ஓட்டு சாவடி தேர்தல் அலுவலர் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியுள்ளது.
சென்னை, அண்ணா பல்கலை பேராசிரியர்களுக்கு, நேற்று, தடுப்பூசி போடப்பட்டது. படிப்படியாக ஒவ்வொரு பல்கலை மற்றும் கல்லுாரிகளிலும் தடுப்பூசி போடப்படும் என, உயர்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
