UPDATED : மார் 19, 2021 12:00 AM
ADDED : மார் 19, 2021 01:07 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில், தாமதம் ஏற்படாது என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் உயர்கல்வி அமைப்புகளில் சீர்திருத்தங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட, புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்விக் கொள்கை குறித்து, ராஜ்யசபாவில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்துப் பேசிய, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “கொரோனா வைரசால், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில், தாமதம் ஏற்படாது. &'&'அதற்கு தேவையான சில நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன; அது முடிந்த பின், புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும்,” என்றார்.
