தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி டிவியில் பாடம் பள்ளி கல்வி துறை உத்தரவு

கல்வி டிவியில் பாடம் பள்ளி கல்வி துறை உத்தரவு

கல்வி டிவியில் பாடம் பள்ளி கல்வி துறை உத்தரவு


UPDATED : மார் 22, 2021 12:00 AM

ADDED : மார் 22, 2021 11:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 22, 2021 12:00 AM ADDED : மார் 22, 2021 11:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், கொரோனா தாக்கம் காரணமாக, 2020 மார்ச், 25 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச், 10 முதல் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டன. அதன்பின், நிலைமை சீரானதும், 10 மாதங்கள் கழித்து, ஜன., 19ல், பிளஸ் 2 வகுப்பு; பிப்., 8ல் மற்ற வகுப்புகளும் துவங்கின.
இந்நிலையில், தேர்தல் காரணமாகவும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததாலும், இன்று முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2க்கு, மே, 3ல் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல், பள்ளிகள் மூடப்பட்டாலும், &'ஆன்லைன்&' வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. 
இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, &'டிவி&' வழியாக, பாக்கி உள்ள பாடங்களை நடத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.கல்வி, &'டிவி&' நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தவும்,பாட வகுப்புகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us