UPDATED : மார் 23, 2021 12:00 AM
ADDED : மார் 23, 2021 04:07 PM
தமிழகத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலர் ராஜீவ்ரஞ்சன், நேற்று உயர் கல்வித் துறை முதன்மை செயலருடன், ஆலோசனை நடத்தினார். அதன்பின், அவர் விடுத்த அறிக்கை:
கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி, இன்று முதல், உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும், பல்கலை, நிகர்நிலை பல்கலை மற்றும் கல்லுாரிகள் செயல்படாது.
மாணவர்களுக்கு இணைய வழி முறையில், வாரத்தில் ஆறு நாட்கள், தொடர்ந்து வகுப்புகள் நடக்கும்.அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்மாணவர்களுக்கு, குறிப்பாக இறுதி பருவ மாணவர்களுக்கு, செயல்முறை வகுப்புகள் மற்றும் செயல்முறை தேர்வுகளை, வரும், 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த பருவத்திற்கான இறுதித் தேர்வுகளை, இணைய வழியில் மட்டுமே நடத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
