தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவிலான யோகா போட்டி பதக்கம் சான்றிதழ் வழங்கல்

தேசிய அளவிலான யோகா போட்டி பதக்கம் சான்றிதழ் வழங்கல்

தேசிய அளவிலான யோகா போட்டி பதக்கம் சான்றிதழ் வழங்கல்


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 25, 2021 03:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 25, 2021 03:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி;
மாநில அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு, பதக்கம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய யோகா கூட்டமைப்பு நடத்தும் தேசிய அளவிலான யோகா போட்டிக்கு தேர்வு செய்யும், மாநில அளவிலான யோகா போட்டி, புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் சார்பில் கடந்த வாரம் நடந்தது. இப்போட்டியில் 98 பேர் கலந்து கொண்டனர். இதில், 78 பேர் காலிறுதி போட்டிக்கும், 57 பேர் அரையிறுதி போட்டிக்கும், 37 பேர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். 
இறுதியாக 16 பேர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேசிய அளவிலான இறுதி போட்டி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று 25ம் தேதி நடக்கிறது.இறுதி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி, தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடத்தில் நடந்தது. பாலாஜி வரவேற்றார்.
சங்கத் தலைவர் ஆனந்தபாலயோகி பவனானி, சங்க புரவலர் மதன்மோகன், மாணவ மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர்.மூத்த துணைத்தலைவர் கஜேந்திரன், தேவசேனா பவனானி, சங்க பொருளாளர் சண்முகம், உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் சதிஷ்குமார் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us