தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை வேளாண் பல்கலையில் சர்வதேச வானிலையியல் தினம்

கோவை வேளாண் பல்கலையில் சர்வதேச வானிலையியல் தினம்

கோவை வேளாண் பல்கலையில் சர்வதேச வானிலையியல் தினம்


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 25, 2021 03:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 25, 2021 03:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், சர்வதேச அறிவியல் வானிலையியல் தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் துணைவேந்தர் குமார், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலநிலையும் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும், குளிர்சாதன பொருட்களால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் பேசினார்.
தொடர்ந்து, பயிர் மேலாண்மை இயக்குனர் (பொறுப்பு) சாந்தி, காலநிலை மாற்றத்தால் மண் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், முதுநிலை கல்வி டீன் ஜான் கென்னடி, நுாற்றாண்டுகளாக ஒவ்வொரு கண்டத்திலும் ஏற்பட்டுள்ள சிறு, சிறு காலநிலை மாற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தனர்.
அன்டார்டிக் பெருங்கடலில் வானிலை மாற்றத்தால், தாவர மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இந்திய தாவரங்கள் சர்வே நிலைய விஞ்ஞானி பழனிசாமி விளக்கமளித்தார். வானிலையியல் தினம் முன்னிட்டு இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. 
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, காலநிலை மாற்றம் குறித்த பதிப்பீடுகள் காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டது. கல்லுாரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் என, 80க்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us