தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மார்ச் 31க்குள் செய்முறை தேர்வு

மார்ச் 31க்குள் செய்முறை தேர்வு

மார்ச் 31க்குள் செய்முறை தேர்வு


UPDATED : மார் 25, 2021 12:00 AM

ADDED : மார் 27, 2021 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 25, 2021 12:00 AM ADDED : மார் 27, 2021 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாநிலம் முழுதும், கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும், கொரோனா தொற்று பரவியது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பள்ளிகளுக்கு, மார்ச், 22 முதல், விடுமுறை விடப்பட்டது. கல்லுாரிகளுக்கு, நேற்று முன்தினம் முதல், விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகளும், கல்லுாரிகளும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட, அனைத்து வகை கல்லுாரிகளிலும், 31ம் தேதிக்குள், நேரடி வகுப்புகள், செய்முறை மற்றும் தேர்வுகளை முடித்துக் கொள்ள, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் அறிவுறுத்தி "உள்ளார்.
இதன்படி, அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசின் உத்தரவுப்படி, அனைத்து இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் செய்முறை பயிற்சி வகுப்புகள் மற்றும் செய்முறை தேர்வுகளை, வரும், 31க்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதன் பின், ஆன்லைனில் பாடங்களை நடத்திக் கொள்ளலாம். தேர்வுகள் முழுதும், ஆன்லைனிலேயே நடத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us