மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; புதுச்சேரி காங்., வாக்குறுதி
மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; புதுச்சேரி காங்., வாக்குறுதி
UPDATED : மார் 28, 2021 12:00 AM
ADDED : மார் 28, 2021 09:14 PM
புதுச்சேரி:
புதுச்சேரியில் காங்., கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் ஏப்.,6ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், காங்., - திமுக கூட்டணி, பா.ஜ., - அதிமுக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி, இன்று (மார்ச் 28) தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* 10, 12ம் வகுப்பு பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும்.* குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.* ரேஷனில் மாதம்தோறும் தவறாமல் அரிசி, சர்க்கரை, பருப்பு வழங்கப்படும்.* மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா இலவசம், வை-பை வசதி.* மாநில அந்தஸ்து கிடைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.* மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க தொடர்ந்து முயற்சிக்கப்படும்.* சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள் திறக்கப்படும்.* முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு மாத உதவித்தொகை படிப்படியாக ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.* மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும்.* மாநிலத்தில் தனி பள்ளி கல்வி வாரியம் அமைக்கப்படும்.
