தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி: ஐகோர்ட் உத்தரவு

பேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி: ஐகோர்ட் உத்தரவு

பேராசிரியர் பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி: ஐகோர்ட் உத்தரவு


UPDATED : மார் 28, 2021 12:00 AM

ADDED : மார் 28, 2021 09:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 28, 2021 12:00 AM ADDED : மார் 28, 2021 09:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலையில், பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியராக பதவி உயர்வு பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, பேராசிரியர் பதவிக்கு இணை பேராசிரியர்களும், இணை பேராசிரியர்கள் பதவிக்கு, உதவி பேராசிரியர்களும் விண்ணப்பித்தனர். கடந்த, 2018ல், நேர்முகத் தேர்வு நடந்து முடிந்தது. அதன்பின், எந்த தகவலும் இல்லை.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கு, ஆசிரியர்கள் தரப்பில் மனுக்கள் அனுப்பப்பட்டன. இதற்கிடையில், பதவி உயர்வுக்கு கூடுதல் தகுதி நிர்ணயித்து, பல்கலை சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, பதவி உயர்வுக்கு விண்ணப்பித்து, நேர்முக தேர்வில் பங்கேற்ற கணபதி, மலர்விழி உள்ளிட்டோர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். தேர்வு முடிந்த பின், கூடுதல் தகுதியை அறிமுகப்படுத்த முடியாது என, மனுக்களில் கூறப்பட்டன.
மனுக்களை, நீதிபதி பார்த்திபன் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஐசக் மோகன்லால், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராயினர். 
நீதிபதி பார்த்திபன் பிறப்பித்த உத்தரவு:

சிண்டிகேட் தீர்மானம் வாயிலாக, கூடுதல் தகுதிகளை அறிமுகம் செய்தது மனுதாரர்களுக்கு பொருந்தாது. முன் தேதியிட்டு, சிண்டிகேட் தீர்மானத்தை மனுதாரர்களுக்கு அமல்படுத்தியது, ரத்து செய்யப்படுகிறது.
மனுதாரர்களுக்கு, அவர்களின் தகுதி அடிப்படையில் உள்ள உரிமைப்படி, பதவி உயர்வு வழங்க, அண்ணா பல்கலை உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். நான்கு வாரங்களில் இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us