UPDATED : மார் 30, 2021 12:00 AM
ADDED : ஏப் 01, 2021 05:08 PM
அவரது செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில், தங்கி படித்த மாணவர்களில், 19 பேர், மத்திய தேர்வாணையம், மார்ச் 25ல் நடத்திய, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் டில்லியில், ஆளுமைத் தேர்வை சந்திக்க உள்ளனர்.
குறுந்தகடு
இம்மைய மாணவர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்தில் இருந்து முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற, அனைத்து தேர்வர்களுக்கும், இம்மையம் சார்பில், இந்த ஆண்டுக்கான மாதிரி ஆளுமைத் தேர்வு, ஏப்., 8, 9ல் நடத்தப்பட உள்ளன. மாதிரித் தேர்வை ஆறு குழுக்கள் நடத்த உள்ளன.
ஒவ்வொரு குழுவிலும், தலைமைச் செயலர் நிலையில் பணிபுரிவோர், மாவட்ட கலெக்டர்களாக பணியாற்றியவர்கள், குடிமைப்பணித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் பேராசிரியர்கள் இடம் பெற்றுஉள்ளனர். தேர்வர்கள் மாதிரி ஆளுமைத் தேர்வில், எவ்வாறு விடையளித்தனர் என்பதை, அவர்களே கண்டால்தான், தங்கள் குறைபாடுகளை நீக்கிக் கொள்ள ஏதுவாக இருக்கும். எனவே, அவர்கள் ஆளுமைத் தேர்வில் பங்கேற்கும் போதே, வீடியோவில் அவர்கள் செயல்பாட்டை பதிவு செய்து, தேர்வு முடிந்ததுடன், குறுந்தகடாக வழங்கப்படும்.
ரூ.2,000அதைப் பார்த்து, தங்கள் தகவல் பரிமாற்றம், உடல் மொழி, மொழியில் சரளத்தன்மை போன்றவற்றை, உண்மையான ஆளுமைத் தேர்வுக்கு முன், விருத்தி செய்து கொள்ள முடியும். மாதிரி ஆளுமைத் தேர்வுக்கு வருவோருக்கு, அண்ணா மேலாண்மை நிலையத்திலேயே, மதிய உணவு வழங்கப்படும். ஆளுமைத் தேர்வில் பங்கேற்க, ஊக்கத்தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படும்.
இது தொடர்பான விபரங்களை, www.civilservicecoaching.com இணையதளத்தில் காணலாம். இவ்வாறு, இறையன்பு தெரிவித்துள்ளார்.
