தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் நிறுத்தம்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் நிறுத்தம்

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சம்பளம் நிறுத்தம்


UPDATED : ஏப் 02, 2021 12:00 AM

ADDED : ஏப் 02, 2021 06:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2021 12:00 AM ADDED : ஏப் 02, 2021 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இது குறித்து, தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரி யர், அலுவலர் சங்கம் சார்பில், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பனிடம் அளிக்கப்பட்ட மனு: 

அனைத்து பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மார்ச் மாத சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான சம்பளம் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை.
இதற்கு, அரசு தரப்பில் நிதி ஒதுக்காததே காரணம் என தெரிய வந்துள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்களால், நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப் படாமல் உள்ளது. இது குறித்து, பள்ளி கல்வி இயக்குனர் நடவடிக்கை எடுத்து, ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளம், தாமதமின்றி கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us