UPDATED : ஏப் 02, 2021 12:00 AM
ADDED : ஏப் 02, 2021 06:56 AM
குழந்தை பருவத்தில் அசுத்தமான காற்றை சுவாசிப்பவர்களுக்கு இளைஞர் பருவத்தில் இருதய நோய் பாதிப்ப ஏற்படும் ஆபத்து உள்ளது எனஅமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.
உலகளவில் அதிகரித்த வாகன போக்குவரத்து அழியும் வன பரப்பளவு, வெப்பநிலை போன்றவை காரணமாக காற்று மாசு அதிகரிக்கிறது. இதற்கு முதியோர் இளைஞர் மட்டுமல்ல குழுந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
பெற்றோருடன் வெளியிடத்துக்கு பயணம் செல்லும் போது, கார் பஸ், போன்ற வாகனங்கள் வெளியிடும் புகை காட்டுத்தீயால் ஏற்படும் புகையை சுவாகிக்க நேரிடுகிறது. இவ்வாறு குழந்தை பருவத்தில் பல நாட்கள் சுவாசிக்கும் குழந்தைகள், தங்கள் இளைஞர் பருவத்தில் ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி இருதய பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என அமெரிக்காவின் ஸ்டான்ட் போர்டு பல்கலை. ஆய்வில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் கபலிபோர்னியாவில் அதிக தொழிற்சாலை இருக்கும் பகுதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியின் அருகே வசித்த 6-8 வயதுக்குட்பட்ட குழந்தைகளைஆய்வுக்கு உட்படுத்தினர். அங்குள்ள பிரஸ்னோ காற்று மாசு அளவை கண்காணிக்கும் நிலையம் மூலம் தினசரி சராசரி காற்றுமாசு அளவு எடுக்கப்பட்டது.
முதல் நாள் முதல் வாரம், முதல் மாதம், 3-வதுமாதம் , 6-வது மாதம், 12-வது மாதத்தின் காற்று மாசு அளவு குறிப்பிடப்பட்டது. இவற்றுடன் குழந்தைகளின் ரத்த அழுத்தம், ரத்த மாதிரி ஆகியவை சோதனை செய்து ஒப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தஆய்வு முடிவை வெளியிட்டுள்ளர்.அமெரிக்காவில் நுரையீரல் தொடர்பான பாதிப்பால் அதிக அளவிலான மக்கள் உயிரிழக்கின்றனர். உலகளவில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் காரணிகளில் நுரையீரல் பாதிப்பு உள்ளது.
