தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் 400 கூடுதல் சீட் அடுத்த ஆண்டு முதல் அமல்

ஐ.ஐ.டி.,யில் 400 கூடுதல் சீட் அடுத்த ஆண்டு முதல் அமல்

ஐ.ஐ.டி.,யில் 400 கூடுதல் சீட் அடுத்த ஆண்டு முதல் அமல்


UPDATED : நவ 09, 2009 12:00 AM

ADDED : நவ 09, 2009 04:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2009 12:00 AM ADDED : நவ 09, 2009 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 


வரும் கல்வி ஆண்டில் ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுக்கு புதிதாக 400 இடங்கள் சேர்க்கப்படுகிறது என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்தியாவில் ஏற்கனவே ஏழு ஐ.ஐ.டி.,கள் உள்ளன. இந்நிலையில் மத்திய அரசு புதிதாக சில ஐ.ஐ.டி.,களை உருவாக்கியுள்ளது. இதில் 2008-09 கல்வி ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ள ஐதராபாத் மற்றும் பாட்னா ஐ.ஐ.டி., கள் தற்போது தற்காலிக வளாகங்களில் இயங்கி வருகின்றன.


இந்த இரண்டு ஐ.ஐ.டி.,களிலும் புதிதாக ஐந்து பாடப்பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா 40 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஒரு ஐ.ஐ.டி.,யில் கூடுதலாக 200 இடங்கள் உருவாகின்றன. இதன் மூலம் அடுத்த கல்வி ஆண்டில் இரு ஐ.ஐ.டி.,களிலும் 400 இடங்கள் கூடுதலாக கிடைக்கின்றன. சமீபத்தில் ரூர்க்கி ஐ.ஐ.டி., நடத்திய ஜே.இ.இ., தேர்வில் தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் இந்த இரண்டு ஐ.ஐ.டி., களும் அனுமதி அளித்தால் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.


பீகார் மனிதவள மேம்பாட்டு செயலாளர் அஜய் குமார் கூறியதாவது: மனிதவள அமைச்சகம் சார்பில் டில்லியில் நடக்கும் கூட்டத்தில் புதிதாக சேர்க்கப்படும் 200 இடங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் தங்கும் விடுதி வசதிகள் ஆகியவை பாட்னா ஐ.ஐ.டி.,யில் உருவாக்குவது பற்றி விவாதிக்கப்படும்.


தற்போது ஐ.ஐ.டி., க்கென புதிய வளாகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது பாட்னா நகரத்தின் மேற்கு பகுதியில் 100 கி.மீ தொலைவில் 500 - 600 ஏக்கர் பரப்பளவில் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகளுடனும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் வசதிகளுடனும் அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


ஐதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி.,யும் தற்போது, தற்காலிக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய வளாகம் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அடுத்த கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்குப் பின், புதிய வளாகத்துக்கு மாணவர்கள் மாற்றப்படுவார்கள். தவிர, ‘மூன்று பல்கலைக்கழகங்களை அமைக்க மாநில அரசு ரூ.15 கோடியை ஒதுக்கியுள்ளது’ என்று உயர்கல்வி தலைவர் கே.சி.ரெட்டி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us