தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர்

அரசு பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர்

அரசு பள்ளியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர்


UPDATED : ஏப் 05, 2021 12:00 AM

ADDED : ஏப் 05, 2021 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 05, 2021 12:00 AM ADDED : ஏப் 05, 2021 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஏகாட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், முன்புறம் மட்டும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
கடம்பத்துார் ஒன்றியம், ஏகாட்டூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் சார்பில், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், 2015 - 16ல், நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. கடந்த 2018ல், பயன்பாட்டிற்கு வந்த புதிய பள்ளி கட்டடத்தில், மூன்று தளங்கள், ஐந்து வகுப்பறைகள், தலா, ஒரு தலைமையாசிரியர் அறை, அலுவலகம், ஓவியம், நுாலகம், ஆய்வகம், கணினி அறிவியல் மற்றும் ஆசிரியர்களுக்கான அறை என, மொத்தம், 12 அறைகள் உள்ளன.
இந்த உயர்நிலைப் பள்ளிக்கு, சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில், &'குடி&'மகன்களின் கூடாரமாக மாறி வந்தது.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, 7 லட்சம் ரூபாயில், பள்ளியின் முன்புறம் மட்டும் சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. மேலும் சுற்றுச்சுவர் பணியை முழுமைப்படுத்தவும், பள்ளியின் முன்புறம் உள்ள குட்டையை மூடவும் கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us