UPDATED : ஏப் 05, 2021 12:00 AM
ADDED : ஏப் 05, 2021 10:03 AM
அ நிறம் | அளவு
அதில், தேர்வுக்கான விடை எழுதும் முதன்மை தாள்கள் மற்றும் மாணவர்களின் தகவல் இடம் பெறும் முகப்பு சீட்டை ஒன்றாக இணைக்க வேண்டும். மொழிப் பாடங்களுக்கு, 30 பக்கங்களுக்கு புள்ளியிடப்பட்ட, கோடிட்ட வெற்று தாள்கள் வழங்கப்படும்.
கூடுதல் விடைத்தாள்களும் அதேபோல் வழங்கப்படும். உயிரியலுக்கு, தாவரவியல், விலங்கியல் என, தனித்தனி முதன்மை தாள்கள், ஒரே முகப்பு தாளுடன் வழங்கப்படும். கணக்கு பதிவியலுக்கு, கட்டங்கள் உள்ள விடைத்தாள்கள் தரப்படும்.
வரலாறு தேர்வுக்கு இந்திய வரைபடம் மற்றும் உலக வெளிப்புற வரைபடத் தாள் இணைக்கப்படும். புவியியலுக்கு ஒரு வெளிப்புற வரைபடத் தாள் தரப்படும். வணிக கணிதம் மற்றும் புள்ளியியலுக்கு, வரை கட்ட தாள் தரப்படும், என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
