ஐ.ஐ.டி - ஜே.இ.இ., தேர்வு எழுதுபவர்களுக்கு செயல்திறன் அட்டை
ஐ.ஐ.டி - ஜே.இ.இ., தேர்வு எழுதுபவர்களுக்கு செயல்திறன் அட்டை
UPDATED : நவ 09, 2009 12:00 AM
ADDED : நவ 09, 2009 05:46 PM
ஐ.ஐ.டி - ஜே.இ.இ., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செயல்திறன் அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அட்டையே சான்றிதழாக கருதப்பட உள்ளது.
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனங்களின் கூட்டு மாணவர் சேர்க்கை வாரியக் கூட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக பங்களிப்புடன் சமீபத்தில் நடந்தது. இதில் ஜே.இ.இ., தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பர்பாமென்ஸ் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, இந்த கார்டில் தேர்வு எழுதுபவர் பெறும் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட உள்ளன.
கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற, அங்கீகரிக்கும் வகையில் அந்த அட்டையை சான்றிதழாகவும் கருதிக்கொள்ளும் நடைமுறை முதன்முறையாக அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை வாரியம் மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை இணையதளத்திலும் வெளியிட உள்ளது.
