தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னதாக நடத்த திட்டம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னதாக நடத்த திட்டம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை முன்னதாக நடத்த திட்டம்


UPDATED : நவ 10, 2009 12:00 AM

ADDED : நவ 10, 2009 12:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2009 12:00 AM ADDED : நவ 10, 2009 12:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மார்ச் கடைசி வாரத்திற்கு பதில், இரண்டாவது வாரத்திலேயே துவக்கி, அதே மாதத்தில் முடிப்பது குறித்து, தேர்வுத் துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


கடந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்களை ஆசிரியர்கள் சரிவர திருத்தாதது கண்டுபிடிக்கப்பட்டதும், அக்டோபர் மாதம் 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை அழைத்து தேர்வுத் துறை விசாரணை நடத்தியது. அப்போது, தங்களுக்குள்ள பிரச்னைகளை பட்டதாரி ஆசிரியர்கள் எடுத்துக் கூறினர்.


‘பிளஸ் 2 தேர்வு முன்னதாக துவங்குவதால், விடைத்தாள் திருத்துதல் உள்ளிட்ட இதர பணிகளும் விரைவாக முடிகின்றன. அதனால், முதுகலை ஆசிரியர்கள் பணியை விரைவாக முடித்து, கோடை விடுமுறையை அனுபவிக்கின்றனர். ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை மிகவும் தாமதமாக துவக்குவதால், எல்லாமே தாமதமாகிறது. பள்ளிப் பணி, தொடர்ச்சியாக தேர்வுப் பணி என கோடை விடுமுறையை எடுக்க முடியவில்லை. இது, மன <உளைச்சலை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னை தீர, இரு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் துவக்கி விரைவாக முடிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனர்.


பொதுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், தேர்வில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து, தேர்வுத் துறை விரைவில் முடிவெடுக்க உள்ளது. ‘இரு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் நடத்தலாமா அல்லது பத்தாம் வகுப்பு தேர்வை, ஒரு வாரம் முன்னதாக துவக்கலாமா’ என்று தேர்வுத் துறை ஆலோசித்து வருகிறது.


இரு தேர்வுகளையும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தால், ஏதாவது குழப்பங்கள் ஏற்படலாம் என்றும், அதிகமான தேர்வுப் பணிகளை கண்காணிப்பது சிரமமாக இருக்கும் என்றும் தேர்வுத் துறை கருதுகிறது. எனவே, ஒரே நேரத்தில் தேர்வை துவக்குவதற்கு பதில், பத்தாம் வகுப்பு தேர்வை மட்டும் முன்னதாக துவக்குவது குறித்து, தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.


வழக்கமாக, பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் துவங்கி, ஏப்ரல் முதல் வாரம் வரை நடக்கும். அதற்கு பதில், தேர்வை 10 நாட்களுக்கு முன்னதாக மார்ச் 14, 15ம் தேதிகளில் துவக்கி, அதே மாதத்தில் முடிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். ஓரிரு நாளில், இது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.


பொதுத் தேர்வு தற்காலிக அட்டவணை தயாரிக்கும் பணிகளும், தேர்வுத் துறையில் துவங்கியுள்ளன. தற்காலிக அட்டவணை தயாரானதும், முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோருக்கு அனுப்பி, அவர்களின் கருத்துக்கள் கேட்கப்படும். அதிகமான ஆசிரியர்கள், அட்டவணை மாற்றம் குறித்து கருத்து தெரிவித்தால், மாற்றம் செய்யப்படும். பெரும்பாலும், தற்காலிக அட்டவணையில் மாற்றம் எதுவும் இருக்காது. அதுவே இறுதி செய்யப்படும். இறுதி அட்டவணை, தேர்வெழுதும் மாணவர்கள் எண்ணிக்கை விவரம் ஆகியவை, டிசம்பர் முதல் வாரத்திற்குள் தெரிந்து விடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us