UPDATED : ஏப் 30, 2021 12:00 AM
ADDED : ஏப் 30, 2021 06:04 PM
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 கம்ப்யூட்டர்கள் திருடு போனது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, 412 மாணவர்கள், 27 ஆசிரியர்கள் உள்ளனர். இங்குள்ள கம்ப்யூட்டர் லேப்பில் கடந்த, 22ல் செய்முறை தேர்வு நடந்து முடிந்தது. நேற்று வழக்கம்போல் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து விட்டு சென்றனர். இன்று காலை பள்ளிக்கு வந்த கம்ப்யூட்டர் ஆசிரியர் பார்த்திபன் லேப்புக்கு சென்று பார்க்கும்போது, கம்ப்யூட்டர் லேப் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த, ஒன்பது கம்ப்யூட்டர்கள், ஸ்கேனர், பிரின்டர் உள்ளிட்டவை திருடு போனது தெரிந்தது.
திருட வந்தவர்கள் மிளகாய் பொடி தூவியும், தண்ணீர் கொண்டு கழுவி விட்டும் நேர்த்தியான முறையில் திருடி சென்றுள்ளனர். இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் அஜிஸ் புகாரின்படி, பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் அருகே அரசு பள்ளியில், கம்ப்யூட்டர்கள் திருடு போனது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
