தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு

சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு

சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு


UPDATED : ஏப் 30, 2021 12:00 AM

ADDED : ஏப் 30, 2021 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2021 12:00 AM ADDED : ஏப் 30, 2021 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, பட்டய கணக்காளர்களுக்கான இறுதித் தேர்வும், இடைநிலை தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நம் நாட்டில், கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுக்கத் துவங்கி உள்ளது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி மற்றும் கல்லுாரிகள் மூடப்பட்டு, பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. ஐ.சி.ஏ.ஐ., எனப்படும், இந்திய பட்டய கணக்காளர்கள் கழகத்தால், சி.ஏ., எனப்படும் பட்டய கணக்காளர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான இறுதித் தேர்வுகள், மே 21ம் தேதி துவங்குவதாக இருந்தன. இதேபோல், இடைநிலைத் தேர்வுகளை, மே 22ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து, ஐ.சி.ஏ.ஐ., நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, அடுத்த மாதம் துவங்க இருந்த, சி.ஏ., இறுதித் தேர்வும், இடைநிலைத் தேர்வும் ஒத்திவைக்கப்படுகின்றன.தொடர்ந்து, கொரோனாவால் நிலவும் சூழல் கண்காணிக்கப்பட்டு, அதற்கேட்ப தேர்வுகளுக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும். தேர்வுகள் நடப்பதற்கு, 25 நாட்களுக்கு முன், புதிய தேதிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us