தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

மதுரை காமராஜ் பல்கலை தேர்வு முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை


UPDATED : ஏப் 30, 2021 12:00 AM

ADDED : ஏப் 30, 2021 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 30, 2021 12:00 AM ADDED : ஏப் 30, 2021 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி தேர்வு முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனி லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி மையங்கள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ளன. 2017-19 ல் தொலைநிலைக் கல்வி தேர்வில் தேர்வெழுதாதவர்களுக்கு மதிப்பெண் வழங்கியது, அதிக கட்டணம் வசூலித்தது, ஆவணங்களை அழித்த முறைகேடுகள் நடந்தன. 2020 பிப்ரவரியில் நடந்த தேர்வில் சில மையங்களில் உதவியாளர்கள் துணையுடன் மாணவர்களை தேர்வெழுத அனுமதித்தனர்.
பல்கலையின் சில தற்காலிக ஊழியர்கள் வீட்டில் தனியாக விடைத்தாள்களில் பதில் எழுதி, பின் அவற்றை பண்டல்களில் மறைமுகமாக சேர்த்துள்ளனர். தமிழகம், கேரளாவில் குறிப்பிட்ட மையங்களைச் சேர்ந்த மாணவர்களை வீடுகளில் இருந்தவாறு தேர்வெழுத அனுமதித்து உள்ளனர். தேர்வு முறைகேடு, விடைத்தாள்கள் மாயமாகி பின் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தவறு செய்தவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. தேர்வு முறைகேடு குறித்து மூத்த போலீஸ் அதிகாரி தலைமையில், உயர்நீதிமன்ற மேற்பார்வையில் விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு லயோனல் அந்தோணிராஜ் மனு செய்தார்.

நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு: 

மதுரை காமராஜ் பல்கலையில் போலி கல்விச் சான்று வழங்கிய விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை 6 மாதங்களில் விசாரித்து, 3 மாதங்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வழக்கில் இந்நீதிமன்றம் மார்ச்சில் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இதற்கும் பொருந்தும். இதற்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. வழக்கை முடிக்கிறோம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us