UPDATED : ஏப் 30, 2021 12:00 AM
ADDED : ஏப் 30, 2021 06:12 PM
பெங்களூரு:
மாணவர்களின் திறன் அறிக்கையை சமர்பிக்க, இன்று வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் திணறுகின்றனர்.
கொரோனா பரவலால், நடப்பாண்டில், பாதி நாட்கள் பள்ளியிலும், கொஞ்ச நாட்கள் ஆன்லைன் கல்வியாகவும், பல நாட்கள் விடுமுறையாகவும் அரசு துவக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் நாட்கள் கடந்து விட்டன. மாணவர்கள், அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், மாணவர்களின் திறன் அறிக்கையை, இன்றைக்குள் சமர்ப்பிக்க, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர்கள், ஆன்லைன் கற்றல் மற்றும் செயல்முறை வகுப்புகள், படைப்புகள், குழந்தைகளின் சுய விபரங்கள் வித்யாகமா வகுப்புகள், வாட்ஸ் ஆப் குழு செயல்பாடுகள், யூனிட் தேர்வுகள் என அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்து வருகின்றனர். ஆனால், அனைத்தும் அக்டோபரில் மீண்டும் தடைபட்டது.
ஆசிரியர்கள் கூறியதாவது:
எங்களிடம் கல்வி கற்கும் குழந்தைகளின் தனித்திறன்களை அறிந்து தான், அளவீடு செய்கிறோம். இதன் அடிப்படையில் தான், அறிக்கையும் தயார் செய்து வருகிறோம்.
வானொலி மூலம் பாடங்களை அனுப்புவது; முடிந்தவரை மாணவர்களுடன் தொடர்பில் இருப்பது என, எங்கள் கடமையை செய்து வருகிறோம். சில தனியார் பள்ளிகளில், கடந்தாண்டு செயல்பாடுகளை வைத்து, நடப்பாண்டில் மதிப்பீடு வழங்குகின்றனர்.இதனால், அறிக்கைகளை விரைவில், சமர்பிக்கின்றனர். இந்த முறையில் மதிப்பீடு செய்வது, போலியானதாகவே இருக்கும். மாணவர்களின் அறிக்கை தயாரிக்க கூடுதல் நாட்கள் வழங்கினால், நிதானமாக செயல்பட முடியும். இவ்வாறு கூறினர்.
