தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மே மாத சம்பளம்; பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மே மாத சம்பளம்; பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

மே மாத சம்பளம்; பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு


UPDATED : மே 05, 2021 12:00 AM

ADDED : மே 05, 2021 03:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2021 12:00 AM ADDED : மே 05, 2021 03:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பள்ளி விடுமுறையை காரணம் காட்டி, மே மாதத்திற்கான ஊதியம் பிடித்தம் செய்ய கூடாதென, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்களுக்கு, வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் வகுப்பு கையாள்வர். இவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில், மாதம் 10 ஆயிரம் ரூபாய், ஊதியமாக வழங்கப்படுகிறது.
கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆக.,ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு வராததால், அலுவலக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, ஊதியம் வழஙக உத்தரவிடப்பட்டது. தற்போது தொற்று வேகமாக பரவுவதால், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், &'வழக்கமாக மே மாதம் கோடை விடுமுறை என்பதால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படுவதில்லை. சிறப்பு வகுப்புகள் நடத்தி, குடும்ப செலவை சமாளித்து கொள்வோம்.தற்போது தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அதுபோன்ற முயற்சிகளும் பலனிக்காததால், ஊதியம் வழங்காவிடில் பெரிய சிரமமாகி விடும். &'எனவே, மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us