தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வைரஸ் வேகமாக பரவுவது ஏன்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

வைரஸ் வேகமாக பரவுவது ஏன்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்

வைரஸ் வேகமாக பரவுவது ஏன்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்


UPDATED : மே 05, 2021 12:00 AM

ADDED : மே 05, 2021 03:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 05, 2021 12:00 AM ADDED : மே 05, 2021 03:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மும்பை:
&'இரண்டாவது அலையில் தென்படும் உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ், முந்தையதைவிட, இரண்டரை மடங்கு ஆபத்தானதாக உள்ளது; இதுவே, பரவல் அதிக வேகமாக நடப்பதற்கு காரணம்&' என, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆபத்தானது

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த, டாடா அடிப்படை ஆராய்ச்சி மையம் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த, இந்திய அறிவியல் மையம் ஆகியவை இணைந்து, கொரோனா வைரஸ் பரவல் குறித்து ஆய்வு மேற்கொண்டன. 

கணித அடிப்படையில் நடந்த இந்த ஆய்வு குறித்து, அவை கூறியுள்ளதாவது:

தற்போது பரவி வரும் வைரஸ், முந்தையதைவிட, இரண்டரை மடங்கு ஆபத்தானது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அவர் வாயிலாக, மேலும், மூன்று பேருக்கு பரவும் ஆபத்து உள்ளது. அதனால் தான், இரண்டாவது அலையில், தொற்று பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்ந்தால், ஜூனில் இருந்து பலி எண்ணிக்கை வெகுவாக குறையும்.மே மாதத்தில் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் படிப்படியாக குறைந்து, ஜூலையில் பள்ளிகளை திறக்கும் சூழ்நிலை ஏற்படும்.

உள்ளூர் ரயில்

பிப்., முதல் வாரத்தில், இரண்டாவது அலை துவங்கியது. ஆனால், உள்ளூர் ரயில்கள் முழுமையாக இயக்க உத்தரவிட்டதே, பாதிப்பு அதிகரிக்க காரணமாகி விட்டது. இவ்வாறு அவை கூறியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us