UPDATED : மே 08, 2021 12:00 AM
ADDED : மே 08, 2021 04:39 PM
பெங்களூரு:
&'&'கல்யாண கர்நாடகா பகுதியிலுள்ள விமானியாகும் விருப்பமுள்ளோரின் கனவு விரைவில் நிறைவேற, கலபுரகியில் பயிற்சி பள்ளி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது,&'&' என, கலபுரகி விமான நிலை இயக்குனர் ஞானேஸ்வர் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கலபுரகி விமான நிலையத்தில், விமான ஓட்டிகளுக்கான பள்ளியை செயல்படுத்த, ஜி.எம்.ஆர்., பைலட் பயிற்சி மையமும், மற்றுமொரு நிறுவனமும் ஏலம் எடுத்துள்ளன. இதற்கான பணிகள் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் பள்ளி அமைக்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கொரோனா கால கட்டத்தில், பயணியர் வருகை குறைவான போதிலும், கிருமி நாசினி பயன்படுத்தி, உரிய பாதுகாப்பு வசதிகளுடன் கலபுரகியிலிருந்து, பெங்களூரு, திருப்பதி, ஹின்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கான விமான சேவை தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. விமானங்களில், இருக்கைகள் சமூக இடைவெளியோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
