தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிதரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிதரம் உயர்த்த மக்கள் கோரிக்கை

நூற்றாண்டு கடந்த அரசுப் பள்ளிதரம் உயர்த்த மக்கள் கோரிக்கை


UPDATED : மே 13, 2021 12:00 AM

ADDED : மே 13, 2021 08:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2021 12:00 AM ADDED : மே 13, 2021 08:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில்பாளையம்:
ஸ்மார்ட் கிளாஸ், கணினி வழிக் கல்வி, அதிக மாணவர் சேர்க்கை என, தனியார் பள்ளிகளுக்கு சவால் விடுகிறது, நூற்றாண்டைக் கடந்த அரசுப் பள்ளி. நடுநிலைப்பள்ளியான இதை, உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சி, கோட்டைப்பாளையத்தில், அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. கடந்த, 1921ல் துவக்கப்பள்ளியாக, ஆரம்பிக்கப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த இப்பள்ளி, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அன்னுார் தாலுகாவில் உள்ள, மற்ற அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வரும் நிலையில், இப்பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.இப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன் 150 பேர் படித்தனர். தற்போது, 366 பேர் படிக்கின்றனர். 2019ம் ஆண்டில் சிறந்த பள்ளிக்கான தமிழக அரசின் விருதை, இப்பள்ளி பெற்றுள்ளது. எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளும் இப்பள்ளியில் செயல்படுகின்றன.
இப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெப பிச்சை மெடோஸ் கூறியதாவது:

இங்கு எட்டு கணினிகள் முழுமையாக செயல்படுகின்றன. மூன்றாம் வகுப்பு முதலே கணினி வாயிலாக, கல்வி கற்பிக்கிறோம். இங்கு 2 ஆயிரம் புத்தகங்கள் நுாலகத்தில் உள்ளன. தமிழ் மற்றும் ஆங்கிலம் என, இரு வழியிலும் கற்பிக்கப்படுகிறது.ரோட்டரி கிளப் ஆஃப் மோனார்க் சார்பில், பள்ளிக்கு, டேபிள், அலமாரி, நாற்காலி என பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் ரோட்டரி கிளப் ஆப் சாய் சிட்டி சார்பில், கணினிகள் வழங்கியுள்ளனர். தனியார் பள்ளியின் கட்டமைப்புக்கு இணையான வசதிகள், இங்கு செய்யப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்நிலைத் தொட்டி, மோட்டாருடன் அமைக்கப் பட்டுள்ளது. 
ஒவ்வொரு வகுப்பறையிலும், தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, வாட்ஸ்ஆப் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. இங்கே அனைத்து வசதிகளும் உள்ளதாலும், கற்பித்தல் திறனாலும் ஆண்டுக்காண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
ஒவ்வோர் ஆண்டும் தேசிய வருவாய் வழி தேர்வில், இப்பள்ளி மாணவர்கள் பலர் தேர்ச்சி பெற்று, மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பெறுகின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார். 
பெற்றோர்கள் கூறுகையில், &'இப்பள்ளி மாணவர்கள் ஒன்பதாம் வகுப்புக்கு மூன்று கி.மீ., தொலைவில் உள்ள கோவில்பாளையம் அல்லது வெள்ளமடை செல்ல வேண்டியுள்ளது. எனவே, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். 
மேலும், பள்ளி வளாகத்தில் சைக்கிள் ஸ்டாண்ட், திறந்தவெளி கலையரங்கம் அமைத்து தர வேண்டும். இரண்டு ஏக்கர் 20 சென்ட் நிலம் இருப்பதால், உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இடப் பிரச்னை இல்லை. அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us