தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜி., மாணவர்களுக்கு மறு தேர்வு; கல்லுாரிகளுடன் ஆலோசனை

இன்ஜி., மாணவர்களுக்கு மறு தேர்வு; கல்லுாரிகளுடன் ஆலோசனை

இன்ஜி., மாணவர்களுக்கு மறு தேர்வு; கல்லுாரிகளுடன் ஆலோசனை


UPDATED : மே 20, 2021 12:00 AM

ADDED : மே 20, 2021 03:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2021 12:00 AM ADDED : மே 20, 2021 03:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
வரும் 25ம் தேதி முதல், செமஸ்டர் தேர்வை நடத்துவது குறித்து கல்லுாரி முதல்வர்களுடன் அண்ணா பல்கலை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளின் மாணவர்களுக்கு, 2020 நவம்பர் - டிசம்பரில் நடத்தப்பட வேண்டிய செமஸ்டர் தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும், மாணவர்கள் அதிக சிரமத்துக்கு ஆளானதாகவும் புகார்கள் எழுந்தன.

வாய்ப்பு

இது குறித்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தி, மீண்டும் வரும் 25ம் தேதி முதல், தேர்வு நடத்தப்படும் என அறிவித்தார். இந்த தேர்வை, ஏற்கனவே தேர்வில் &'பாஸ்&' ஆன மாணவர்கள் விருப்பம் இருந்தால் எழுதலாம்; தேர்ச்சி பெறாதவர்கள் இந்த தேர்வை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு &'ஆன்லைன்&' தேர்வாக இல்லாமல், மாணவர்கள் வீட்டில் இருந்தவாறு மூன்று மணி நேரம் தேர்வு எழுதி, அதை ஆன்லைன் வழியே அண்ணா பல்கலைக்கு அனுப்புவதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டது.

பேச்சு


இந்த தேர்வை நடத்த இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், தேர்வுக்கான ஆயத்த பணிகள் குறித்து அண்ணா பல்கலை அதிகாரிகள், கல்லுாரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தேர்வுக்கான வினாத்தாளை மாணவர்களுக்கு அனுப்புவது, அவர்களின் விடைத்தாள்களை பெறுவது, தேர்வில் &'காப்பி&' அடிக்காமல், ஆள் மாறாட்டம் இல்லாமல் மாணவர்கள் எழுதுவது குறித்த விதிகள் பேசப்பட்டன. தேர்வு விதிமுறைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதே நேரம், இது ஊரடங்கு காலம் என்பதால் தேர்வை தள்ளி வைக்கலாமா என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us