தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 திருப்புதல் தேர்வு மாணவர்கள், பெற்றோர் குழப்பம்

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு மாணவர்கள், பெற்றோர் குழப்பம்

பிளஸ் 2 திருப்புதல் தேர்வு மாணவர்கள், பெற்றோர் குழப்பம்


UPDATED : மே 20, 2021 12:00 AM

ADDED : மே 20, 2021 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 20, 2021 12:00 AM ADDED : மே 20, 2021 04:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாவது திருப்புதல் தேர்வில், தேர்வு துறை வழங்கிய எண்ணை பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. அதனால், பொது தேர்வு ரத்தாகுமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே, 5ல் நடத்தவிருந்த பொது தேர்வு, கொரோனா இரண்டாம் அலையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அறிவுறுத்தல்

இந்நிலையில், அரசு பள்ளிகளை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள், பாடங்களை மறந்து விடாமல் இருக்க, அவர்களுக்கு அலகு தேர்வு என்ற பெயரில், பாடங்களின் சில பகுதிகளுக்கு மட்டும், அவ்வப்போது, &'வாட்ஸ் ஆப்&' வழி தேர்வுகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதல் திருப்புதல் தேர்வு முடிந்த நிலையில், இரண்டாவது திருப்புதல் தேர்வு துவங்கியுள்ளது.
இதில், விடைத்தாளில் அரசு தேர்வு துறை வழங்கியுள்ள பொது தேர்வு பதிவு எண்ணை எழுதுமாறு, சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், மாணவர்களை அறிவுறுத்தியுள்ளன. அதனால், பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, திருப்புதல் தேர்வு மதிப்பெண் படி, ரிசல்ட் கணக்கிடப்படுமா என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.

கோரிக்கை


இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

மாணவர்களுக்கு, வாட்ஸ் ஆப்பில் அனுப்பும் வினாத்தாளுக்கு, வீட்டில் இருந்தவாறு புத்தகத்தை பார்த்து விடை எழுதி, படம் எடுத்து, வாட்ஸ் ஆப்பில் அனுப்புகின்றனர். இதை மாணவர்களும், பெற்றோருமே எங்களிடம் தெரிவித்து, இப்படி ஒரு தேர்வு தேவையா என, கேட்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் மற்றும் கமிஷனர் நந்தகுமார் உரிய உத்தரவை பிறப்பிக்க, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
மாணவர்களை சந்திக்க உத்தரவு

திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, ஆசிரியர்களுக்கு, &'வாட்ஸ் ஆப்&'பில் அனுப்பப்பட்டுள்ள சில அறிவுரைகள்:

பிளஸ் 2 மாணவர்களுக்கு, முதல் திருப்புதல் முடிந்து, இரண்டாவது தேர்வு நடத்தப்படுகிறது. விடைத்தாள்களை, &'வாட்ஸ் ஆப்&'பில் அனுப்ப முடியாத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, விடைத்தாள்களை பெறுவதாக, ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி, விடைத்தாளை பெற்று, திருத்தம் செய்து, முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், &'ஊரடங்கும், இ- - பதிவும் அமலில் உள்ளது. இதற்கு மத்தியில் மாணவர்களை சந்திக்க முடியுமா என்பது கூட, சி.இ.ஓ., அலுவலகத்துக்கு தெரியவில்லை. இதுபோன்ற நிர்வாகத்தால், ஒட்டுமொத்த துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது&' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us