ஆன்லைன் மோசடியாளர்களை கண்டறியும் பேக் பஸ்டர்: ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு
ஆன்லைன் மோசடியாளர்களை கண்டறியும் பேக் பஸ்டர்: ஐ.ஐ.டி., கண்டுபிடிப்பு
UPDATED : மே 20, 2021 12:00 AM
ADDED : மே 20, 2021 04:35 PM
சண்டிகர்
: ஆன்லைன் கருத்தரங்குகளில் நுழையும் போலி நபர்களைக் கண்டறியும் &'பேக் பஸ்டர்&' என்ற கருவியை பஞ்சாப் ரோபோரி ஐ.ஐ.டி., உருவாக்கியுள்ளது.
&'பேக்பஸ்டர்&' கருவியை உருவாக்கிய நான்கு நபர் குழுவில் முக்கிய உறுப்பினரான டாக்டர் அபினவ் தால் தெரிவித்துள்ளதாவது:
பஞ்சாப் மாநிலத்தின் ரோபோரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களும் இணைந்து &'பேக்பஸ்டர்&' கருவியை உருவாக்கியுள்ளோம்.
தற்போதைய பெருந்தொற்று காலகட்டத்தில், பெரும்பாலான அலுவலகக் கருத்தரங்குகளும், பணிகளும் இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகின்றன. இக்கருத்தரங்குகளில் கலந்துகொண்டுள்ள போலி நபர்களைக் கண்டறிய இந்தக் கருவி உதவும்.
அதாவது இணையக் கருத்தரங்கம் அல்லது ஆன்லைன் வாயிலாக நடைபெறும் கூட்டங்களில், சக பணியாளர்களின் ஒருவரது சார்பாக வேறு ஒருவர் அவரது முகத்தை மாற்றிக் கலந்து கொள்கிறாரா என்பதை இந்தத் தொழில்நுட்பம் கண்டறியும். சமூக ஊடகங்களில் ஒருவரைக் களங்கப்படுத்தும் அல்லது கேலி செய்யும் வகையில் ஒருவரது முகத்திற்குப் பதிலாக வேறு ஒருவரது முகத்தை மாற்றுவது போன்ற செயல்களையும் இந்தக் கருவியால் கண்டறிய முடியும்.
அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் வாயிலாக ஊடகங்களில் போலியான தகவல்கள் அதிகரித்துள்ளன. இது போன்ற தொழில்நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்து மிகவும் எதார்த்தமாகக் காட்சி தருகின்றன. இதை கண்டறிவது மிகவும் சவாலானது. ஆனால் எங்கள் குழு இந்த சவாலை முறியடித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
