தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டணம் செலுத்தாத இன்ஜி., கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்து

கட்டணம் செலுத்தாத இன்ஜி., கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்து

கட்டணம் செலுத்தாத இன்ஜி., கல்லுாரிகள் அங்கீகாரம் ரத்து


UPDATED : மே 21, 2021 12:00 AM

ADDED : மே 21, 2021 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2021 12:00 AM ADDED : மே 21, 2021 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் அளித்த பேட்டி:

அண்ணா பல்கலையால் நடத்தப்பட்ட, &'ஆன்லைன்&' தேர்வில் பிரச்னை ஏற்பட்டதால், பல மாணவர்களால் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற, புகார் எழுந்தது. எனவே, தேர்ச்சி பெறாதவர்களுக்கு மறுதேர்வு நடத்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, மீண்டும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே தேர்வுக்காக மாணவர்களிடம் கட்டணம் வசூலித்த 23 இன்ஜி., கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் அந்த கட்டணத்தை செலுத்தாமல் உள்ளன. அவை 24ம் தேதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிட்டால், கல்லுாரிகளின் இணைப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும். துணை வேந்தர் சுரப்பாவின் நிர்வாகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்க, அ.தி.மு.க., ஆட்சியில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கமிஷன் அறிக்கை அளித்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் பணியாற்றும் 4,000த்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்ற தவறான தகவல், கடந்த ஆட்சியில் பரவியது. இதுதொடர்பாக இரண்டு பேர் என்னை சந்தித்ததாக, புகைப்படங்கள் வலம் வருகின்றன. கவுரவ விரிவுரையாளர்கள் விஷயத்தில், உரிய கல்வி தகுதி மற்றும் யு.ஜி.சி., வழிகாட்டுதல் படி மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்படுவர். இது, வெளிப்படைத் தன்மையுடன் நடக்கும்.
எனவே, யாரையாவது நம்பி பணம் கொடுத்து விரிவுரையாளர்கள் ஏமாற வேண்டாம். யாராவது பணம் வசூலிப்பது தெரிந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதெல்லாம் பாடப்புத்தகத்தில் இடம்பெறும் அம்சமா?


அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

தமிழக அரசின் திறந்தநிலை பல்கலையில், எம்.ஏ., அரசியல் அறிவியல் பாடத்தில், சமூக அறிவியல் துறையின் சார்பில் &'இந்திய அரசாங்கமும், அரசியலும்&' என்ற பாடம் நடத்தப்படுகிறது. அந்த புத்தகத்தில் 142ம் பக்கத்தில், சில அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அதன் விபரம்:


தி.மு.க., மற்றும் பொதுவுடைமை கட்சிகள், மக்களை ஓட்டு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அவர்களை, தேசிய பாதையில் கலந்து விடாமல் தடுக்கின்றன. அந்த கட்சிகள், கண்மூடித்தனமாக சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. முஹம்மதியர் கலவரம் உருவாக்கி, வன்முறை வெடிக்கும் போது, கண்டிக்காமல் இருக்கின்றன. இவ்வாறு அதில் உள்ளன.
இது, பாடப் புத்தகத்தில் இடம்பெறும் அம்சமா? இதை எழுதிய பேராசிரியர் ஓய்வு பெற்று விட்டார். அதை எழுதியதற்கான காரணம் குறித்து, அவரையும், பல்கலை துணை வேந்தரையும் விசாரித்தால், எந்த பதிலும் இல்லை. இந்த முறைகேடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us