தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அலபாமா பள்ளிகளில் மீண்டும் யோகா பயிற்சி

அலபாமா பள்ளிகளில் மீண்டும் யோகா பயிற்சி

அலபாமா பள்ளிகளில் மீண்டும் யோகா பயிற்சி


UPDATED : மே 23, 2021 12:00 AM

ADDED : மே 23, 2021 09:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 23, 2021 12:00 AM ADDED : மே 23, 2021 09:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
அமெரிக்காவின் அலபாமாவில் பள்ளி மாணவர்களுக்கு, &'யோகா&' பயிற்சிகளை கற்றுக்கொடுக்க அனுமதி வழங்கும் மசோதாவில் மாகாண கவர்னர் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 1993ம் ஆண்டு, பள்ளிகளில் யோகா பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க தடை விதிக்கப்பட்டது. யோகா பயிற்சிகள், ஹிந்து மதத்திற்கு தொடர்புடையதாக இருப்பதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந் நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பின் யோகாவுக்கு விதிக்கப்பட்ட அந்த தடை, தற்போது நீக்கப்பட்டுள்ளது.
மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இது தொடர்பான மசோதாவில், கவர்னர் கே ஐவே கையெழுத்திட்டார்.எனினும், இந்த யோகா பயிற்சிகளில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டு உள்ளன. சில யோகா ஆசனங்களை மட்டுமே செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆசனங்களுக்கு ஆங்கில பெயர்களை வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
&'நமஸ்தே&' என்ற வார்த்தையை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினர்களும் கிறிஸ்துவ குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us