தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் விசாரணை
தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் விசாரணை
UPDATED : மே 25, 2021 12:00 AM
ADDED : மே 25, 2021 07:08 PM
சென்னை:
தனியார் பள்ளியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்தது; ஆபாச உரையாடலில் ஈடுபட்டது தொடர்பாக, வணிகவியல் ஆசிரியர், &'சஸ்பெண்ட்&' செய்யப்பட்டு உள்ளார்; போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி மாணவியர் சிலருக்கு, அப்பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், பாலியல் தொல்லை அளிப்பதாக நேற்று புகார் எழுந்தது. ஆன்லைன் வாயிலான வகுப்புகளில், மாணவியரிடம் ஆபாசமாக பேசியதாகவும், ஆபாச படங்களை அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஆன்லைன் வகுப்பின் போது, இடுப்பில் துண்டு மட்டும் கட்டி வந்து, மாணவியரிடம் பேசிய படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, துறை ரீதியான விசாரணை நடத்த, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் உத்தரவிட்டார். சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, பள்ளிக்கு நேரில் சென்று, தகவல்களை பெற்று அரசிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து, பள்ளி கல்வி அமைச்சர் மகேஷ் கூறுகையில், &'&'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது,&'&' என்றார்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்கும், தனிப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார், நேற்று பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். ராஜகோபாலின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், ஆசிரியர் ராஜகோபாலனை, &'சஸ்பெண்ட்&' செய்து, பள்ளி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
