உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கி.ரா., பற்றி 5 நாள் கருத்தரங்கம்
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கி.ரா., பற்றி 5 நாள் கருத்தரங்கம்
UPDATED : மே 25, 2021 12:00 AM
ADDED : மே 25, 2021 07:14 PM
சென்னை:
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், எழுத்தாளர் கி.ரா., பற்றி இணைய வழியிலான, ஐந்து நாட்கள் கருத்தரங்கம் இன்று துவங்கியது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற, மறைந்த எழுத்தாளர் கி.ரா., என்ற, கி.ராஜநாராயணன் சமீபத்தில் இறந்தார். அவரது நினைவை போற்றும் வகையில், சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின், மொழியியல் புலம் சார்பில், ஐந்து நாட்கள் இணைய வழி கருத்தரங்கம், இன்று துவங்கியது. வரும், 29ம் தேதி வரை, தினமும் மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை, சிறப்பு கருத்தரங்கம் இணையவழியில் நடக்க உள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் விசயராகவன் தலைமையில், இன்று கி.ரா.,வின் கதா பாத்திரங்கள் என்ற தலைப்பில், எழுத்தாளர் நாறும்பூநாதன்; நாளை, கி.ரா., என்றொரு மானுடம் என்ற தலைப்பில், முனைவர் பஞ்சாங்கம் உரையாற்றுகின்றனர்.
வரும், 27ம் தேதி, கி.ரா.,வின் படைப்பு மொழி என்ற தலைப்பில், பேராசிரியர் சுலோக்சனா; 28ம் தேதி, கி.ரா.,வின் பொதுத் தளங்கள் என்ற தலைப்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்; 29ம் தேதி கி.ரா.,வின் தனித்துவங்கள் என்ற தலைப்பில், பேராசிரியர் வெங்கட சுப்புராய நாயகரும் பேசுகின்றனர்.
கருத்தரங்கில் இணைய, https://chat.whatsapp.com/D29JJFWCe u214aZ01m2FBS மற்றும், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfdUU7W_hhrbDbM6aSaY80AUcPb3_hRZJbP2TB_qbdf1- 9Ruw/viewform என்ற இணைப்புகளை பயன்படுத்தலாம்.
மேலும் விபரங்களுக்கு, 97896 09591 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
