தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிராமப்புற குழந்தைகள் கல்வி கற்பதில் பின்னடைவு

கிராமப்புற குழந்தைகள் கல்வி கற்பதில் பின்னடைவு

கிராமப்புற குழந்தைகள் கல்வி கற்பதில் பின்னடைவு


UPDATED : மே 27, 2021 12:00 AM

ADDED : மே 27, 2021 02:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2021 12:00 AM ADDED : மே 27, 2021 02:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
கொரோனாவால், ஒன்றரை ஆண்டாக நர்சரி, ஒன்றாம் வகுப்புகள் துவங்கவில்லை. இதனால் கிராமப்புற குழந்தைகள் கல்வி கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. &'வீடியோ&' காட்சிகள் மூலம் பள்ளிகள் மற்றும் பாடங்களை காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வயது, 3 நிரம்பிய பிள்ளைகளை, நர்சரியிலும், 4 வயது நிரம்பிய பிள்ளைகளை, ஒன்றாம் வகுப்பிலும் சேர்ப்பது வழக்கம். மாநிலத்தின் நகர்ப்பகுதிகள் மற்றும் பணக்கார குடும்பத்தினர் மட்டும் தங்களின் பிள்ளைகளை நர்சரி, ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்கின்றனர்.
கிராமப்புற பிள்ளைகள், அங்கன்வாடி போன்ற பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். எனினும், கடந்த ஓராண்டாக, கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு செல்ல முடியாமல், வீட்டிலேயே குழந்தைகள் பெற்றோருடன் காலம் கழிக்கின்றனர். இது இப்படியே நீடித்தால் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என கல்வி வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
அவர்களுக்கு பள்ளிச்சூழலை அறிமுகம் செய்ய வேண்டும் என அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். 

குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் இயக்குனர் நாகசிம்ஹா கூறியதாவது:

குழந்தைகளின் கல்விக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி என்றால் என்ன, இங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி பாடம் கற்பது, ஒழுங்குடன் நடப்பது, மொழித்திறன் என பல விஷயங்களை பள்ளிகள் கற்பிக்கின்றன.
பள்ளிகள் பிள்ளைகளுக்கு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தியது. அனைத்து பிள்ளைகளும் சமமாக கல்வி கற்க வாய்ப்பிருந்தது.தற்போது கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் அதற்கு வாய்ப்பில்லை. எனவே பிள்ளைகளின் கல்விக்கு மாற்று ஏற்பாடு செய்வது நல்லது.
நகர்ப்பகுதிகளில் நர்சரி, ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டு ஆன்லைனில் பாடம் நடக்கிறது என்றாலும் பள்ளிச்சூழலை உணர முடியவில்லை.இதற்கு தீர்வு காணும் வகையில் பள்ளிகளை பற்றி குறும்படங்கள் தயாரித்து ஊடகங்கள் மூலம் காட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு பள்ளிச்சூழல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இந்த வயது தான் பிள்ளைகளின் உடல், மனரீதியான வளர்ச்சிக்கு அஸ்திவாரமாகும். எனவே மாற்று வழியில் பிள்ளைகள் கல்வி கற்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிமான்ஸ் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மனநல டாக்டர் சந்திரசேகர் கூறுகையில், &'உண்மையில் குழந்தைகளுக்கு நர்சரிகள் அவசியமில்லை. குழந்தைகளின் மனதிடம் அதிகரிக்க வேண்டுமானால் கல்விச்சுமையை திணிக்கக்கூடாது. &'அதற்காக பள்ளிச்சூழல் இல்லாமலும் இருக்கக்கூடாது. குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு தக்கபடி வகுப்புகள் இருப்பது அவசியம்,&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us