தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தீக் ஷா ஆப் மூலம் தேர்வு பயிற்சி

தீக் ஷா ஆப் மூலம் தேர்வு பயிற்சி

தீக் ஷா ஆப் மூலம் தேர்வு பயிற்சி


UPDATED : மே 27, 2021 12:00 AM

ADDED : மே 27, 2021 02:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2021 12:00 AM ADDED : மே 27, 2021 02:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:
மாணவர்களுக்காக மத்திய அரசு உருவாக்கிய &'தீக் ஷா&' ஆப் மூலம், தேர்வு பயிற்சி என்ற புதிய நிகழ்ச்சியை கர்நாடக அரசு நேற்று துவக்கியுள்ளது.
பொது தேர்வுகளை எதிர்கொள்வது, போட்டி தேர்வுகளுக்கு தயார்ப்படுத்தி கொள்ளும் வகையில்மாணவர்களுக்காக மத்திய அரசு &'தீக் ஷா&' ஆப் உருவாக்கியது. அந்த மொபைல் ஆப் மூலம் கர்நாடக அரசு, தேர்வு பயிற்சி என்ற புதிய நிகழ்ச்சியை புகுத்தியது. இதை, &'தீக் ஷா&' ஆப் மூலம் தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ்குமார் பெங்களூரு விதான்சவுதாவில் நேற்று துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்த புதிய நிகழ்ச்சி பி.யு.சி., மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். போட்டி தேர்வுகளை தைரியத்துடன் எதிர்கொள்வது, அதற்கு பயிற்சி பெறுவது, மாதிரி வினாக்கள் என பல விஷயங்கள்ஆப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்காக &'போகஸ்&' என்ற புதிய நிகழ்ச்சியை, விரைவில் &'தீக் ஷா&'ஆப்பில் துவக்கப்படும். பாடங்கள் தொடர்பான வீடியோக்கள், மாதிரி வினா, விடைகள் இடம்பெற்றிருக்கும்.மொத்தம் 9,000 வினாக்கள் உள்ளன. நாட்டிலேயே இது ஒரு புதிய முயற்சியாகும்.
https://diksha.gov.in/ என்ற இணையதள முகவரியிலும், ஆன்டிராய்ட் மொபைல் போனில்,கூகுல் ப்ளே ஸ்டோரில், https://bit.ly/KA-diksha மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த புதிய திட்டத்தின் மூலம் 1 முதல் 10 வரையிலான 85 லட்சம் மாணவர்களும், 13 லட்சம்பி.யு.சி., மாணவர்களும் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us