தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.டெக்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிரச்னை; பதிலளிக்க உத்தரவு

எம்.டெக்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிரச்னை; பதிலளிக்க உத்தரவு

எம்.டெக்., படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிரச்னை; பதிலளிக்க உத்தரவு


UPDATED : மே 27, 2021 12:00 AM

ADDED : மே 27, 2021 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2021 12:00 AM ADDED : மே 27, 2021 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இரண்டு எம்.டெக்., படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான &'கட் - ஆப்&' தேதியை நீட்டிக்கக் கோரிய மனுவுக்கு, மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்ப கல்விக் குழு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த குழலி என்பவர் தாக்கல் செய்த மனு:

அண்ணா பல்கலையில் &'எம்.டெக்., பயோ -டெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூடேஷனல் பயாலஜி&' வகுப்புகள் உள்ளன. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பயோ டெக்னாலஜி துறை, இந்த படிப்புகளுக்கு நிதி உதவி வழங்குகிறது. இந்த படிப்புக்கு, நானும் விண்ணப்பித்தேன்.
மாணவர்கள் சேர்க்கையில், இடஒதுக்கீடு பின்பற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, இரண்டு படிப்புகளையும் நடத்தவில்லை என, அண்ணா பல்கலை அறிவித்தது.
வற்புறுத்தல்

சேர்க்கையில் 49.5 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்றும்படி மத்திய அரசும், 69 சதவீத ஒதுக்கீட்டை பின்பற்றும்படி மாநில அரசும் வற்புறுத்தின. இதையடுத்து, இரண்டு படிப்புகளையும் ரத்து செய்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அண்ணா பல்கலை உத்தரவை ரத்து செய்து, மத்திய அரசு விதிமுறைப்படி மாணவர்களை சேர்க்கும்படி, 2021 பிப்., 19ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பயோ -டெக்னாலஜியில் 25 இடங்கள்; கம்ப்யூடேஷனல் பயாலஜியில் 20 இடங்கள் என, மொத்தம் 45 இடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால், இரண்டு படிப்புகளிலும், தலா ஆறு என 12 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதி இடங்களுக்கான இரண்டாவது பட்டியலை வெளியிடும்படி மனு அனுப்பினேன்.
மத்திய பயோ டெக்னாலஜி துறையில் இருந்து எனக்கு வந்த பதிலில், மார்ச் 20 வரை தான், மாணவர் சேர்க்கைக்கு தொழில்நுட்ப கல்வி குழு அனுமதி அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சேர்க்கை தேதியை நீட்டிக்கும்படி, தொழில்நுட்ப கல்விக் குழுவிடம் அண்ணா பல்கலை அனுமதி கோரி உள்ளது. &'கட் ஆப்&' தேதிஎனவே 33 காலியிடங்களிலும் மாணவர்களை சேர்க்க &'கட்- ஆப்&' தேதியை நீட்டிக்கும்படி, தொழில்நுட்ப கல்விக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும். காலியிடங்களை நிரப்ப இரண்டாவது பட்டியலை வெளியிடவும், மாணவர்கள் சேர்க்கையை நடத்தவும், உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சரவணன் ஆஜரானார். மனுவுக்கு, வரும் 1ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், தொழில்நுட்ப கல்விக்குழு மற்றும் அண்ணா பல்கலைக்கும், நீதிபதி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us