பி.எஸ்.பி.பி., பள்ளி மீண்டெழும்! இசை ஆசிரியை அம்மு நம்பிக்கை
பி.எஸ்.பி.பி., பள்ளி மீண்டெழும்! இசை ஆசிரியை அம்மு நம்பிக்கை
UPDATED : மே 29, 2021 12:00 AM
ADDED : மே 29, 2021 12:19 PM
சென்னை:
&'&'பி.எஸ்.பி.பி., யானது, பள்ளி மட்டுமல்ல; வாழ்வின் தொடர் முன்னேற்றத்துக்கான இடம். &'&'தற்போதுள்ள சோதனை காலத்தை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இணைந்து எதிர்கொள்வோம்; நம்பிக்கையுடன் மீண்டெழுவோம்,&'&' என, அப்பள்ளியின் இசை ஆசிரியை அம்மு கூறினார்.
மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சென்னை, பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். பள்ளியை அபகரிக்க சதி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பள்ளியின் இசை ஆசிரியை அம்மு கூறியதாவது:
பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி என்பது, எனக்கு முக்கிய அடையாளம். காரணம், நான் பாலா மந்திர் என்ற அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். அனாதை இல்லங்கள், ஒரு குறிப்பிட்ட வயது வரை மட்டுமே ஆதரவற்றோரை வைத்திருக்க முடியும். அதற்கான நேரம் வந்த போது, நான் பட்டப் படிப்பை கூட முடிக்கவில்லை. இசைத் திறமை மட்டும் இருந்தது. அதை மட்டுமே நம்பி, மூன்று பள்ளிகளில், இசை ஆசிரியை பணிக்கான நேர்காணலில் பங்கேற்றேன்.
என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும் என, நம்பினேன்; பாடக்கூட வாய்ப்பு வழங்க வில்லை. அப்போது, எனக்கு வேலையோ, அங்கீகாரமோ இல்லாததால், நான் மிகவும் விரக்தி அடைந்திருந்தேன். நான் ஒரு பிராமணப் பெண் இல்லை என்றாலும், பி.எஸ்.பி.பி., பள்ளி நேர்காணலுக்கு சென்றேன்; பாடினேன்; வேலை கிடைத்தது. அந்த நாள், எனக்கு ஒரு அடையாளம் கிடைத்த நாள். நான், பி.எஸ்.பி.பி.,யின் இசை ஆசிரியர் என்பது தான் எனக்கான அங்கீகாரம்; அடையாளம் எல்லாமே.
அது ஒரு பள்ளி மட்டுமல்ல; வாழ்வின் தொடர் முன்னேற்றத்துக்கான இடம். அந்த பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர்.அதனால் தான், அங்கிருந்து ஒரு இளங்கலை, இரண்டு முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை பெற முடிந்தது. அது மட்டுமல்ல; என் மொழி புலமையும், தன்னம்பிக்கையும், தற்போது பலமடங்கு கூடியுள்ளது. நான், இந்த பள்ளியில், ௧3 ஆண்டுகளில், எனக்கான ஒரு இடத்தை அடைந்துள்ளேன்.
இந்த பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியருக்கும், மாணவருக்கும் இந்த நிலை தான் என்பது உண்மை. தற்போதுள்ள சோதனையான காலகட்டத்தை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இணைந்து எதிர்கொள்வோம். நம்பிக்கையுடன் மீண்டெழுவோம். இவ்வாறு அம்மு கூறினார்.
&'போராடுங்கள்; வெற்றி பெறுங்கள்!&'
&'பி.எஸ்.பி.பி., பள்ளி நிர்வாகிகளான நீங்கள் கவலைப்பட தேவையில்லை. நான் உங்களுடன் இருக்கிறேன். போராடி வெற்றி பெறுங்கள்&' என, நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தெரிவித்துள்ளார். அவர், பள்ளி நிர்வாகிகளுடன் பேசிய &'ஆடியோ&' பதிவு வெளியாகி உள்ளது.
அதில், ராம்குமார் கூறியிருப்பதாவது:
நான் விவேகானந்தா கல்லுாரியில் படித்தவன். எனக்கு நிறைய, நல்ல பிராமண நண்பர்கள் உள்ளனர். அப்பாவும், அந்த சமூகத்துக்கு மிகவும் ஆதரவளித்தார். அதாவது, அந்த காலகட்டத்தில், பிராமணர்கள் என்றால், &'காமடியன்&'களாக தமிழ் சினிமாவில் சித்தரிக்கப்பட்டனர். ஆனால் அப்பா, பிரஸ்டீஜ் பத்மநாபன், பாரீஸ்டர் ரஜினிகாந்த், பரீட்சைக்கு நேரமாச்சு உள்ளிட்ட படங்களில், பிராமணர் வேடங்களை ஏற்று, அந்த சமூகத்துக்கு மரியாதையை தந்தார். எனக்கு, ஒய்.ஜி.மகேந்திரன், சுதா உள்ளிட்டோர் நல்ல நண்பர்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்.
பிராமணர்களை சீண்டினால், அவர்கள் புஜங்களை வலிமையாக்கி எழுவர். ராஜராஜ சோழன், பிராமண போர் வீரர்களை வைத்திருந்ததை நாம் அறிவோமே. மராட்டியர்கள், பேஸ்வாக்களிடம் பிராமண போர் வீரர்கள் இருந்துள்ளனரே. எனவே, நீங்கள் கவலைப்பட தேவையில்லை. பிராமண சங்கங்களுடன் இணைந்து, போராடி வெற்றி பெறுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
